வவுனியா, பாரதிபுரத்தில் நேற்று நடந்த விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய வாகனம் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளது.
வவுனியா, விநாயகபுரத்தைச் சேர்ந்த 64 வயதுடை தர்மராஜா என்பவரே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இவரை, வாகனம் ஒன்று மோதி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. தலைப்பகுதியில் காயமடைந்த தர்மராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துடன் இராணுவ வாகனம் ஒன்று தொடர்புபட்டிருக்கலாம் என்று அந்தப் பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
விபத்து நடந்த சந்தர்ப்பத்தில் அந்த வழியாக இராணுவ வாகனம் ஒன்று பயணித்தது என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
Discussion about this post