கொழும்பு பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவர் மாணவன் ஒருவரை, 16 வயதிலிருந்து துஸ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கொழும்பு மேலதிக நீதவான் லோசனி அபேவிக்ரம சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்துக்கு நேற்றுமுன்தினம் பணிப்புரை விடுத்துள்ளார்.
மாணவன் கல்வி கற்கும் பாடசாலையில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியையாக கடமையாற்றும் அந்த ஆசிரியை, நான்கு வருடங்களாக பாடசாலைக்குள்ளும் பல்வேறு இடங்களிலும் மாணவனை துஷ்பிரயோகத்துகு்கு உட்படுத்தினார் என்று கூறப்படுகின்றது.
கடந்த நான்கு வருடங்களாக மாணவனிடன் கைத்தொலைபேசியூடாகத் தொடர்புகளைப் பேணியதுடன், பல்வேறு இடங்களுக்கு மாணவனை அழைத்துச் சென்றுள்ளார் என்றும் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாணவனுக்கு 18 வயது பூர்த்தியானதும் கல்கிஸ்ஸ ஹோட்டலுக்கு 60 தடவைகளுக்கு மேல் அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
Discussion about this post