ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முக்கியமான சந்திப்பு எதிர்வரும் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
இந்தத் தகவலைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உறுதிப்படுத்தினார்.
இலங்கையில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய அரசியல் தீர்வொன்றைப் பெறுவதற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுடனும், சிவில் சமூக அமைப்புகளுடனும் அரசாங்கம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ள நிலையிலும், தமிழருக்கான அரசியல் தீர்வு தொடர்பாக இந்திய அழுத்தங்களைப் பிரயோகித்து வரும் நிலையிலும் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.
ஜனாதிபதிக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு தொடர்பாக முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவிப்புகள் வெளியாகி இருந்தபோதும், இதுவரை சந்திப்பு நடைபெறவில்லை.
இந்தநிலையில், ஜனாதிபதி செயலகத்தால் இந்தச் சந்திப்புத் தொடர்பான அறிவித்தல் நேற்றுமுன்தினம் கூட்டமைப்பின் தலைமைக்கு வழங்கப்பட்டது. இந்தச் சந்திப்பில் அமைச்சர் சமல் ராஜபக்சவும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Discussion about this post