எதிர்வரும் இரு வாரங்களில் அரச துறைகளில் மட்டுமன்றி தனியார் துறைகளிலும் அத்தியாவசிய மருந்துப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று அரச ஔடதவியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அந்தச் சங்கத்தின் தலைவர் அஜித் திலகரட்ண, தற்போது புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய் என்பவற்றுக்கான மருந்துகளின் கையிருப்புக்கள் குறைந்துள்ளன என்று கூறினார்.
கடன் சான்றுப் பத்திர விடுவிப்பு திறைசேரியால் நிறுத்தப்பட்டுள்ளதால் மருந்து வகைகளை இறக்குமதி செய்ய முடியவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள டொலர் பற்றாக்குறைப் பிரச்சினையால் தனியார் துறையினராலும் மருந்துகள் இறக்குமதி செய்ய முடியாமல் போகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் இரு வாரங்களில் நாடு அத்தியாவசிய மருந்துப் பொருள்களின் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post