இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 367 அத்தியாவசியமற்ற பொருளகளின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவால் வெளியிடப்பட்டுள்ளது.
பால் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள், பட்டர் ஜோக்கட், அன்னாசி, மங்குஸ்தான் மற்றும் பழங்கள், ஒரஞ், அவகாடோ, மீன் பாஸ்தா, நூடுல்ஸ், இறைச்சிகள், முட்டை, அப்பிள், திராட்சை, பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருள்களின் இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ளது என்று வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே இத்தகைய பொருள்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்றும், அதற்காக சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
Discussion about this post