கொத்து ரொட்டிக்கான காப்புரிமையை இலங்கை பெற வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இத்தாலியில் உள்ள பீட்சா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஹாம்பர்கள் போன்று பிற நாடுகளின் பூர்வீக உணவுகளுடன் கொத்து ரொட்டியை ஒத்ததாக மாற்ற இலங்கை செயற்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கொத்து ரொட்டி மட்டக்களப்பில் இருந்து தோன்றியது எனக் கண்டறிப்பட்டுள்ளது என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பூர்வீக உணவுகளுக்கான காப்புரிமையைப் பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள சரித ஹேரத், அபிவிருத்தியடைந்த நாடுகளுடனான வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்கான வழிமுறையாக இதைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.
அதேவேளை, தற்போது இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. நாட்டில் பல பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், பொருள்களின் விலைகளும் கூடியுள்ளது. இந்தநிலைமையிலேயே இன்று நாடாளுமன்றம் கூடியிருந்தது.
Discussion about this post