உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் தங்களுக்கு தமக்கெதிராக எதிர் நிலைப்பாட்டை எடுத்த 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கியுள்ளது.
உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் தொடரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கவில்லை.
தங்கள் நாட்டில் உள்ள உள்ள இராணுவ தளங்களை அழிக்கும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டு வருகின்றது என்று உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்தநிலையில் ரஷ்யா 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கியுள்ளது.
உக்ரைன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சுவிட்சர்லாந்து, அல்பேனியா, ஐஸ்லாந்து, மொனாக்கோ, நோர்வே உட்பட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கியுள்ளது
.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் விவகாரத்தில் ஐ.நா.வில் ரஷ்யாவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட சில நாடுகளை தவிர ஏனைய ஐரோப்பிய நாடுகள் ஆதரவைத் தெரிவித்திருந்தன.
Discussion about this post