இலங்கையில் கோழி முட்டைக்கான சில்லறை விலை 28 ரூபாவாக அதிகரித்துள்ளது என்று நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் தற்போது எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியால், கோழித் தீவனங்களின் விலை அதிகரிப்பே இதற்குப் பிரதான காரணம் என்று கூறுப்படுகின்றது.
முன்னர் முட்டைக்கோழிகளுக்கான தீவனம் 3 ஆயிரத்து 200 ரூபாவுக்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 6 ஆயிரத்து 800 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது.
அதேநேரம், கோழித் தீவனத்துக்கான பிரதான உள்ளீடான சோளத்துக்குத் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது.
ஆயிரம் கோழிகள் உள்ள பண்ணையொன்றில் சாதாரணமாக 850 முட்டைகள் கிடைத்தன என்றும், தற்போது தரமற்ற தீவனங்களால் 650 முட்டைகளே கிடைக்கின்றன என்றும் பண்ணை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
Discussion about this post