இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பல்வேறு பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் இறக்குமதிகள் தடைப்பட்டுள்ள நிலையில், அச்சுத்தாள்களுக்கும் தட்டுப்பாடு காணப்படுகின்றது.
அச்சுத்தாள் தட்டுப்பாடு காரணமாக தேசிய லொத்தர் சபையும் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. அச்சிடுவதற்குத் தாள் இல்லாமையால் நான்கு லொத்தர் சீட்டுக்கள் தற்போது விற்பனை வருவதில்லை என்று தெரிவயவருகின்றது.
கொவிசத, ஜாதிக சம்பத, வசன சம்பத, செவன ஆகிய லொத்தர் சீட்டுக்கள் தற்போது விற்பனைக்கு வருவதில்லை என்று விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post