குப்பி விளக்கின் வெளிச்சத்திலேயே ஜனாதிபதியின் சுபிட்சத்தின் தொலை நோக்கு விஞ்ஞாபனத்தை வாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் வாக்குகளின் ஊடாக இந்த ஆட்சியை கவிழ்ப்போம் என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த துர்பாக்கியம் நிறைந்த ஆட்சியை உடன் விரட்டியடிக்க வேண்டும். நாடாளுமன்ற கட்சி தாவல்களின் ஊடாக அதை முன்னெடுக்க முடியாது. இந்த நாட்டு மக்களின் முன்னிலையில் சென்று ஆட்சியை மாற்றுவேன்.
அரசாங்கம் அமைச்சர்களை மாற்றுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவுக்கு அமைச்சர்களை மாற்றுவதன் ஊடாக பதிலை தேட முடியாது. அரசாங்கம் வந்ததில் இருந்து இதுவரை செய்தது தன்னிச்சையாகவும், தூர நோக்கற்ற வகையில் செயற்பட்டு நாட்டை மோசமான நிலைமைக்கு தள்ளியது மட்டுமே.
எதிர்க்கட்சியிலுள்ள பிரதான கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மக்களின் போராட்டங்களுக்கு முன்னின்று தலைமை தாங்குவது மாத்திரமின்றி அந்த போராட்டத்தை வெற்றியுடன் முடிக்கும் வல்லமை கொண்டது . நாட்டின் உழைக்கும் மக்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட மிகை கட்டண வரி விதிப்பை தோற்கடிக்க தொடர்ந்து போராடிய ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றத்தை நாடி மக்களின் உரிமையை பெற்றுக்கொடுத்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post