யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள வெதுக்கங்களை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்தது.
இன்று யாழ்ப்பாணத்தில் சங்கத்தின் பிரதிநிதிகளால் ஊடக சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் வெதுப்பக உற்பத்திகளுக்காக விநியோகிக்கப்படும் மாவின் அளவு குறைக்கப்படவுள்ளது என்று வடக்கான பிறிமா மா விற்பனை முகவர்களுடன் நேற்று நடந்த சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
எமக்கு வழங்கப்படும் மாவின் அளவைக் குறைக்கக்கூடாது என்று கோரியிருந்தோம். ஆயினும் அவர்கள் எதிர்வரும் நாள்களில் மாவின் அளவு குறைக்கப்படும் என்று தெரிவித்தனர்.
மா விநியோகிக்கப்படும் அளவு குறைக்கப்பட்டால் வெதுப்பங்களை மூட வேண்டிய நிலைமை ஏற்படும். தற்போது காணப்படும் எரிபொருள் தட்டுப்பாட்டாலும் எமக்கு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
போதியளவு மா இல்லாத காரணத்தால் வெதுப்பக உற்பத்திப் பொருள்களின் உற்பத்தி அளவைக் குறைக்கத் தீர்மானித்துள்ளோம்.
இந்த விடயம் தொடர்பில் யாழ். மாவட்டச் செயலருடன் கலந்துரையாடி எமது பிரச்சினைக்குத் தீர்வு கோரவுள்ளோம். இது தொடர்பாக மாவட்டச் செயலருக்குக் கோரிக்கைக் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளோம் என்று வெதுப்பக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
Discussion about this post