உக்ரைன் ரஷ்யா இடையே கடும் மோதல்கள் நடைபெற்றுவரும் நிலையில், சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் பரப்புரைகளைத் தடை செய்யும் முகமாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிரம் போன்றவற்றை ரஷ்யா முற்றாகத் தடைசெய்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தவறான செய்திகளை பரிமாற்றம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ரஷ்யா டுடே, ஸ்புட்னிக் மற்றும் ஆர்டிக் போன்ற ரஷ்யன் வலைத்தளங்களும் பிரித்தானியாவில் தடை விதிக்கப்பட்டதை அடுத்தே, புடின் ரஷ்யாவில் மேற்படி சமூக வலைத்தளங்களை ரஷ்யாவில் முடக்கும் தீர்மானத்துக்கு வந்துள்ளார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
Discussion about this post