500 மில்லிகிராம் எடையுடைய பரசிட்டமோல் மாத்திரையின் அதிகபட்ச சில்லறை விலை 2 ரூபா 30 சதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி முதல் இந்த விலை நிர்ணயம் நடைமுறைக்கு வந்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் விடுத்துள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் விலை நிர்ணயம் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக மருந்துப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கான நாணய கடிதங்கள் விடுவிக்கப்படவில்லை.
தற்போது நாடு முழுவதும் உள்ள மருந்தகங்களில் பரசிட்டமோல் உள்ளிட்ட சில மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது.
Discussion about this post