யாழ்ப்பாணம் மாவட்டத்துக்குத் தேவையான எரிபொருளை தொடர்ச்சியாக வழங்குவதற்கு ஏற்றவகையில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு நாள் ஒன்றுக்கு ஒரு இலட்சம் லீற்றர் பெற்றோல் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது நாளொன்றுக்கு ஒரு இலட்சத்து 30 ஆயிரம் லீற்றர் பெற்றோல் தேவைப்படுகிறது என்று மாவட்டச் செயலர் குறிப்பிட்டார்.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற எண்ணத்தில் மக்கள் அதிகமாகப் பெற்றோலைக் கொள்வனவு செய்வதே இதற்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாள் ஒன்றுக்கு டீசல் ஒரு இலட்சத்து 25 ஆயிரத்துக்கும், ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் இடைப்பட்ட அளவில் தேவையாகவுள்ளது என்று தெரிவித்த மாவட்டச் செயலர், நாளொன்றுக்கு 50 ஆயிரம் லீற்றர் மண்ணெண்ணை தேவைப்படுகிறது என்றும் கூறினார்.
எரிபொருளை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்று தெரிவித்த மாவட்டச் செயலர், எரிபொருளை மக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும், எரிபொருளை அதிகளவில் கொள்வனவு செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Discussion about this post