‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிவிசேட வர்த்தமானி இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் வெளியிடப்பட்டுள்ளது.
பெப்ரவரி 28ஆம் திகதி முதல் மேலும் 3 மாதங்களுக்கு இந்தச் செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து மாகாணங்களும் உள்ளடங்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் புத்திஜீவிகளின் கருத்துக்களை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருப்பதால் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது என்று வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post