எண்ணெய் கொள்வனவுக்காக டொலர் வழங்கப்படும் என்று நிதி அமைச்சு கூறியிருந்தபோதும், இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
வலுசக்தி அமைச்சில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், அரசாங்கம் முன்னுரிமையை அறிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
தற்போது கடலில் எண்ணெய் கப்பல்கள் காத்திருக்கின்றன என்று தெரிவித்த அமைச்சர், ஆயினும் அவற்றுக்கான கட்டணத்தைச் செலுத்த டொலர் இல்லை என்று கூறினார்.
கப்பல்களுக்கு கட்டணங்களைச் செலுத்தி உரிய நேரத்தில் எரிபொருளை விடுக்க முடியாமையால், கையிருப்பில் உள்ள எரிபொருள் குறைகின்றது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அடுத்த கப்பல் வரும்வரையில் மட்டுப்படுத்தப்ப எரிபொருளையே சந்தைக்கு விடுவிக்க வேண்டியுள்ளது என்றும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
டொலர் தொடர்ச்சியாக விடுவிக்கப்படும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டிருந்தது என்று தெரிவித்த அமைச்சர், அது இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கூறினார்.
அதேவேளை, எரிபொருள்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் தற்போது தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.
Discussion about this post