மேஷம்
உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் மரியாதை கூடும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.
ரிஷபம்
சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களெல்லாம் நினைவுக்கு வரும். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.
மிதுனம்
கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். தன்னம்பிக்கை பிறக்கும் நாள்.
கடகம்
சமயோசிதமாகவும் சாதுரியமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நிறைவான நாள்.
சிம்மம்
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.
கன்னி
கடந்த கால இனிய அனுபவங்களெல்லாம் நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள் . உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.
துலாம்
சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.
விருச்சிகம்
இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். நம்பிக்கைக்குரியவர்கள் உதவுவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். புதிய பாதை தெரியும் நாள்.
தனுசு
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். உறவினர் நண்பர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பழகுங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
மகரம்
கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனை வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.
கும்பம்
உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். எண்ணங்கள் நிறைவேறும் நாள்.
மீனம்
ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சியை அதிகாரி ஆதரிப்பார். மதிப்புக் கூடும் நாள்.
Discussion about this post