கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் 108 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிழக்கிலங்கையில் சிவபூமி அறக்கட்டளையின் பணியை விஸ்தரிக்கும் நோக்குடன் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்துக்கு 108 சிவலிங்கங்கள் இன்று சிவபூமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் தலைமையில் சிவலிங்கங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
எதிர்வரும் சிவராத்திரி நாளில், பக்தர்கள் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக இந்த சிவலிங்கங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அங்கு திருமந்திர அரண்மனையில் இந்த சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்படும். அத்துடன் 3 ஆயிரம் திருமந்திரங்கள் கருங்கல்லில் உளிகொண்டு தற்போது செதுக்கப்பட்டுள்ளன.
இதுவரை 2 ஆயிரம் பாடல்கள் செதுக்கப்பட்டுள்ளன. இன்னும் ஆயிரம் பாடல்கள் செதுக்கப்பட்டு முடிந்ததும், அவை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்துக்கு அருகில் திருமந்திர அரண்மனையில் பக்தர்கள் வழிபாட்டுக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post