இராணுவப் புலனாய்வாளர்கள் வடக்கு கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் தமிழ்ப் பொலிசாரை விசாரணைக்கு உட்படுத்துவதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தற்போதும் தமிழ்ப் பொலிசாரின் மனங்களில் தமிழீழம் என்ற சிந்தனையேகாணப்படுவதாக
ஒருவர் கூறிய கருத்தினை தென்னிலங்கை சிங்கள ஊடகம் ஒன்று கூறிய
கருத்தின் அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில்கடமையாற்றும் . தமிழ்ப்
பொலிசாரின் பின்புலத்தை கண்டறிவதற்காக இவ் விசாரணை நடைபெறுவதாக
கூறப்படுகின்றது.
இவ்வாறு தமிழ்ப் பொலிசாரிடம். தகவல்களை சேகரிக்கும் இராணுவப்
புலனாய்வாளர்கள்அவர்களது வீடுகள் மற்றும் அயலில் உள்ளவர்களிடமும் தம்மை
குற்றவாளிகள் போன்று விபரங்களைதிரட்டுவதாக பெரும் எண்ணிக்கையான தமிழ்ப்
பொலிசார் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இவ் விடயம் பொலிஸ் தலைமையகத்திற்கு கொண்டு சென்று தமக்குதகுந்த முடிவை
முன்வைக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
Discussion about this post