பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல
குணவர்தன, சந்தித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
முழுமையாக இலங்கை – பாகிஸ்தான் வர்த்தக உடன்படிக்கையை
பயன்படுத்திக்கொள்ள தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் மற்றும்
கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வது அவசியம் என பாகிஸ்தான் பிரதமர் இதன்போது
கூறியுள்ளார்
பாகிஸ்தானுக்கு பௌத்த சமூகத்தினர் விஜயம் செய்வதை மேலும்
மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக
பாகிஸ்தான் பிரதமர் இந்த சந்திப்பின் போது கூறியதாக வர்த்தக அமைச்சு
வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறப்பட்டுள்ளது
Discussion about this post