சர்வதேச நிறுவனமான ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் (Transparency
International) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட அண்மைய ஊழல் மதிப்பாய்வு
சுட்டி (Corruption Perceptions Index) வௌியிடப்பட்டுள்ளது.
இம் மதிப்பாய்வு சுட்டியானது உலகிலுள்ள 180 நாடுகளின் பொதுத்துறை
ஊழல்களின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளது
இம் மதிப்பாய்வு சுட்டியில், புள்ளி வழங்கப்படும் முறையில் 0 என்பது
கூடிய ஊழலலையும் 100 என்பது ஊழலற்றநிலையையும்
குறித்து நிக்கின்றது.
2021 ஆம் ஆண்டிற்கான ஊழல் மதிப்பாய்வு சுட்டியின் அடிப்படையில் இலங்கைக்கு
கொடுக்கப்பட்டுள்ள 37 புள்ளிகள், முன்னைய வருடத்தை விட ஒரு புள்ளி குறைவாக
வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post