அரசின் கீழ் பெருந்தோட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளை
பொறுப்பேற்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பெருந்தோட்ட மக்களுக்கு தரமான சுகாதார சேவையை வழங்கும் நோக்கில் இம்
முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்
ஊடகவியலாளர் சந்திப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கேற்ப, 450 வைத்தியசாலைகளில் ஆரம்ப கட்டமாக 59 வைத்தியசாலைகளை
பொறுப்பேற்க சுகாதார அமைச்சரினால் சமர்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு
அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Discussion about this post