எலி காய்ச்சலால் இலங்கையில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை
கூடியுள்ளதாக சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது.
சென்ற வருடம் காலி மாவட்டத்தில் மாத்திரம் 476 பேர் எலி காய்ச்சலால்
பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு
கூறியுள்ளது
நோய் நிலைமை சம்மந்தமாக கவனத்திற்கொள்ளாமை மற்றும் வைத்தியசாலைக்குச்
சென்று சிகிச்சை பெறாமை போன்றான எலி காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின்
எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம் என காலி மாவட்ட சமூக நல வைத்திய நிபுணர்
அமில ஏரங்க சந்திரசிறி கூறீயுள்ளார்
இப்போது, வயல் பகுதிகளுக்கு அருகில் வசிப்பவர்கள் மட்டுமன்றி நகர்
பகுதிகளில் வசிப்பவர்களும் எலி காய்ச்சலால் பாதிக்கப்படுவதாக அவர் மேலும்
கூறியுள்ளார்
Discussion about this post