ஜனாதிபதி நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என கூறினாலும் அது
வெறும் வாய்ச் சொல்லே தவிர செயலில் செய்யப்படுவதிலலை என சரத் பொன்சேகா
கூறியுள்ளார்.
11 பேர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைகாதது இதனை
வெளிப்படுத்துவதாகவும் கூறினார்.
இச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெறும் போதே அதில்
தொடர்புபட்டவருக்கு பதவி உயர்வு வழங்கப்படுகின்றது என்றும் சரத்
பொன்சேகா சுட்டிக்காட்டினார்.
அதேபோல், புதிய அரசியலமைப்பு தொடர்பாக பேசும் ஜனாதிபதி தலைமையிலான
அரசாங்கமே, 20 ஆவது திருத்தம் மூலம் சர்வாதிகார ஆட்சியை உருவாகியுள்ளது
என அவர் கூறினார்.
Discussion about this post