ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையின் புலம்பெயர் மக்களுடன்
கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு அந்நாட்டின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி
விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட்டிடம் இன்று கோரிக்கை விடுத்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இலங்கை எதிர்நோக்கியுள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து,ஒன்றாக
வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதே அரசின் இலக்கென இதன்போது ஜனாதிபதி
கூறினார் .
மனித உரிமைகள் சம்மந்தமாக இலங்கை முன்னெடுத்து செல்லும்
வேலைத்திட்டங்களின் அடைவு மட்டம், மிகுந்த முன்னேற்றத்தைக் காட்டுவதாக
தாரிக் அஹமட் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு கூறியது.
Discussion about this post