கடந்த இரவு ஏற்பட்ட பாரிய தீப்பரவல் பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் கட்டிடத்தில் ஒரு பகுதியிலேயே இந்த பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தினை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர வைத்தியசாலையின் பணிப்பாளர், இராணுவ அதிகாரிகள் மற்றும் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் ஆகியேர் சிரமத்தின் மத்தியிலும் அயராது உழைத்தனர் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை எனினும் எவருக்கும் எந்தப்பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
Discussion about this post