தமிழ்க் கட்சிகள் சில இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ,
கடிதமொன்றை தயாரித்தது. அக் கடிதம், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்
கோபால் பாக்லேயிடம் நேற்றுமுன்தினம் (18) வ்ழங்கப்பட்டது.
இந்நிலையில், அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், இந்தக் கடிதம்
தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன.
அக் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் உதய கம்மன்பில,
“ எம்முடன் பேசாமல் எங்குச் சென்று பேசினாலும் அதில் பலன் இல்லை.
இந்தியாவின் ஒரு மாநிலம் இலங்கை அல்ல. இது தனிப்பட்ட நாடாகும் . எனவே, அந்தக்
கடிதத்தைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை” என்றார்.
Discussion about this post