பொரளை தேவாலயத்தில்சென்ற செவ்வாய்க்கிழமை (11) கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் சம்மந்தமாக ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவர் பிலியந்தலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் சம்மந்தமாக எம்பிலிப்பிட்டியவில் கைது செய்யப்பட்ட 55 வயதுடைய வைத்தியரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று(18) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற வைத்தியர் பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலையில் பணியாற்றிய பின்னர் குறித்த பகுதியில் தனியார் கிளினிக் நடாத்தி வந்துள்ளார். எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய சந்தேகநபர் இத் தனியார் கிளினிக்கின் பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றி வந்துள்ளார்.
Discussion about this post