நாம் எத்தனை நாடுகளை கண்டிருப்போம் ஆனால் அந்த நாடுகளில் ஏதாவது ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் இருக்கத்தான் செய்கிறது.
அந்த வகையில் ஒரு வித்தியாசமான விஷயத்தை தனக்குள் வைத்திருக்கும் நாடுதான் இது. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் அனைத்து பெரிய மத தலைவர்களும் இங்கு வாழ்கின்றனர்.
போப் என்பவர் இங்கே ஆட்சி செய்கிறார். இந்த நாடு 1929 பிப்ரவரி 11 அன்று உருவாக்கப்பட்டது. 95 வருடங்களை கடந்துவிட்டாலும் இங்கு இதுவரை ஒரு குழந்தைகூட பிறக்கவில்லை இதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வாடிகன் நகரம்
இந்த நாடு வாடிகன் நாடு என அழைக்கப்படுகிறது. உலகின் மிகச்சிறிய நாடு இந்த நாடுதான். இந்த நாட்டில் மருத்துவமனை இல்லை இதன் காரணமாக இது பல இடங்களில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் யாராவது தீவிர நோய்வாய்ப்பட்டாலோ அல்லது ஒரு பெண் கர்ப்பமாக இருந்தாலோ, அவர் ரோமில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார் அல்லது அந்தந்த சொந்த நாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்த நாட்டின் பரப்பளவு 118 ஏக்கர் மட்டுமே. இங்கு பிரசவ அறை இல்லாததால் யாரும் பிரசவம் செய்ய முடியாது. அதனால் அனைவரும் வெளியே செல்கின்றனர்.
இயற்கையான குழந்தைப் பிரசவம் நடைபெற இங்கு அனுமதி இல்லை. இங்கு யாருக்கும் நிரந்தர குடியுரிமை கிடைப்பதில்லை.
இங்குள்ள பெண் எப்போது கர்ப்பமாகி, பிரசவ நேரம் நெருங்குகிறதோ அப்போது இங்குள்ள விதிகளின்படி குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை தாய் இங்கிருந்து செல்ல வேண்டும்.
இது மிகக் கடுமையாகப் பின்பற்றப்படும் விதி. இந்த நாட்டில் வசிக்கும் மக்கள் அனைவரும் தங்கள் பதவிக்காலம் வரை மட்டுமே இங்கு தங்குவார்கள்.
அதுவரை தற்காலிக குடியுரிமை பெறுவார்கள். மருத்துவமனை பிரச்சனையின் காரணமாக இந்த நாட்டில் குழந்தைகள் இதுவரைக்கும் பிறந்தது இல்லை என குறிப்படப்பட்டள்ளது.
Discussion about this post