நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் 9 கட்சிகள் இணைந்து புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கவுள்ளன என்றும், அதன் தலைவராக விமல் வீரவன்ஸ செயற்படவுள்ளார் எனவும் அறிய முடிகின்றது.
9 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற விசேட கூட்டமொன்று நேற்று மாலை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.
அதில் 21 ஆவது திருத்தச் சட்ட வரைபு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் யோசனைகள் இன்று நீதி அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளன.
அதேவேளை, புதிய கூட்டணியை அமைப்பதென்றும், பல கட்சிகளை இணைத்துக்கொள்வது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டணியின் தலைமைப் பதவி விமல் வீரவன்ஸவுக்கு வழங்கப்படவுள்ளது.
10 கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றிருந்த டிரான் அலஸ், அமைச்சு பதவியை பெற்றதால் அவரின் கட்சி கூட்டணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
Discussion about this post