பிரித்தானியாவில் வசித்து வந்த வேறா பெட்செல், என்ற சிறுமிக்கு 1935 ஆம் ஆண்டு அவரின் தந்தை பரிசாக ஒரு சாக்லேட்டை வழங்கியுள்ளார்.
இந்த பரிசு மிகவும் சிறப்பு வாய்ந்தது என்ற காரணத்தால் அதனை சாப்பிடாமல் அப்படியே பாதுகாப்பாக வைத்திருக்க குறித்த சிறுமி தந்தை முடிவு செய்துள்ளார்.
அதற்கமைய பிறகு தனது தந்தையின் அறிவுரைப்படி சாக்லேட்டை ஒரு பாதுகாப்பான பெட்டியில் போட்டு பல ஆண்டுகளாக பாதுகாத்து வந்துள்ளார்.
ஏறக்குறைய அவருக்கு 90 வயது ஆகும் வரை அதனை பத்திரப்படுத்தி வைத்த்துள்ளார்.
எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த பெட்டியை எங்கு வைத்தோம் என்பதை மறந்துவிட்டார், கண்டுபிடிக்கமுடியவில்லை. இவர் தனது 95 வயதில் இறந்தார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் என அனைவரும் அவரது அறையை சுத்தம் செய்து கொண்டிருந்த போது அவர்கள் அந்த பெட்டியை கண்டெடுத்துள்ளனர்.
அதாவது சிறு வயதில் தாய்க்கு இந்த சாக்லேட்டை பற்றிய ஞாபகம் வந்ததும் பிள்ளைகள் அனைவரையும் வீடு முழுவதும் தேடும் படி கூறியுள்ளார்.
இருப்பினும், எவ்வளவு தேடியும் சாக்லேட் கிடைக்கவில்லை என்பதால் வேறா சற்று வருத்தம் அடைந்ததாகவே அவரின் மகள் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் 88 ஆண்டுகள் கழித்து தற்போது கிடைத்துள்ள இந்த சாக்லேட்டை பார்ப்பதற்கு தனது தாய் உயிரோடு இல்லை என்பதை நினைத்து அவர் வருத்தமடைந்துள்ளார்.
அவரின் குடும்பத்தார் சிறப்பு வாய்ந்த அந்த சாக்லேட்டை ஏலம் விட முடிவு செய்துள்ளதாகவும், இதன் மூலம் அவர்களுக்கு கணிசமான தொகை கிடைக்கும் என நம்புவதாகவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post