ஜப்பானை சேர்ந்த 87 வயதான மசாகோ வகாமியா என்ற பெண் முதியவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வீடியோ கேம் மற்றும் புதிய செல்போன் செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான தகவல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளது.
ஹினாடன் என்ற பெயரில் மசாகோ வகாமியா உருவாக்கி உள்ள புதிய செயலி முதியோர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பிரத்யேக பொம்மை விளையாட்டாகும்.
மசாகோ வகாமியா 43 ஆண்டுகள் வங்கி துறையில் பணியாற்றி உள்ளார். அவர் தனது 60-வது வயதில் தான் கம்ப்யூட்டர் பயிற்சி பெற தொடங்கியுள்ளார்.
அவரை பற்றிய பதிவு இணையத்தில் வைரலாகி 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது.
Discussion about this post