பிரெஞ்சு மன்னர் ஒருவரது தலைமுடிகள் சில 7,700 யூரோக்களுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலாம் நெப்போலியனின் (Napoleon I) தலைமுடிகளே இவ்வாறு ஏலத்தில் பெரும் தொகைக்கு விற்பனையாகியுள்ளது. செர்போர்க் (Channel) நகரில் உள்ள ஏல விற்பனைக் கூடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்படி தலைமுடிகள் ஏலத்துக்கு விடப்பட்டுள்ளன. அதன் ஆரம்ப ஏலத்தொகை 1,200 யூரோக்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் பழைய பொருட்களை சேகரிக்கும் ஆர்வம் கொண்ட இருவர் தொலைபேசியூடாக ஏலத்தொகையை கோரி, இறுதியாக €7,700 யூரோக்களுக்கு தலைமுடிகள் விற்பனையாகின.
Discussion about this post