தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையில் அங்கிருந்து
இதுவரை 66 இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு
தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து புறப்படுவதற்கு பயண அனுமதி பெற்ற அனைவரும்
பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என
நம்புவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி இன்றுவரை, அறுபத்தாறு இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும்
மேலும் ஏழு பேர் வெளியேற்றப்படவுள்ளதாகவும் அமைச்சு
குறிப்பிட்டுள்ளது.இதேவேளை இருபத்தி ஒன்று இலங்கையர்கள் தொடர்ந்தும்
ஆப்கானிஸ்தானில் தங்கி இருப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும்
வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை இலங்கை தொடர்ந்து
கண்காணித்து வருகிறது என்றும் மனிதாபிமான நிலைமை குறித்து கவலை
கொண்டுள்ளது என்றும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Discussion about this post