அரச ஊழியர்கள் 5 நாள்களும் பணிக்கு சமூகமளிப்பது அவசிமற்றது என்று வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் மகிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, உலக உணவு பற்றாக்குறை தொடர்பில் பல்வேறு தரப்பினர் எதிர்வு கூறியுள்ளார்கள். அந்தச் சவாலை வெற்றிக்கொள்ள அரசாங்கம் சிறந்த திட்டங்களை வகுத்துள்ளது. அவற்றை விரைவாகச் செயற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு காரணிகளினால் தேசிய விவசாயத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. அரச அலுவலகங்களைச் சூழவுள்ள காணிகளில் மேலதிக பயிர்ச்செய்கையில் ஈடுப்பட வேண்டும் என்று சகல அரச ஊழியர்களிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள விசாலமான அரச மற்றும் தனியார் காணிகளில் தற்காலிகமாக மேலதிக பயிர்ச் செய்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச சேவையாளர்கள் 5 நாள்களும் சேவைக்கு சமூகமளிப்பது அவசியமற்றது என விரைவில் அறிவிக்கப்படும். அரச சேவையாளர்கள் மேலதிகமாக உள்ள நேரத்தை பயனுடையதாக்கும் வகையில் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடப்பட வேண்டும் என்றார்.
Discussion about this post