பல்வேறு குழுக்களின் எதிர்ப்பு மற்றும் கட்டுக்கடங்காத நடத்தை காரணமாக நாட்டில் மொத்தம் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்று பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் பெறுவதற்காக எரிபொருள் நிரப்பும் நிலைய ஊழியர்களை சிலர் மிரட்டியுள்ளனர் என்று தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவோதுன்ன தெரிவித்தார்.
அவ்வாறான நிரப்பு நிலையங்களுக்கான அனைத்து எரிபொருள் முன்பதிவுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இவ்வாறான மிரட்டல் மற்றும் கட்டுக்கடங்காத நடத்தைகள் அதிகம் தோன்றியுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட ஐந்து தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியுள்ளன என்றும் நாவோதுன்ன தெரிவித்தார்.
Discussion about this post