முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவதற்கு
இணக்கம் தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுவும் மத்தியக் குழுவும் இன்றையதினம் (8) டார்லி வீதியில் உள்ள கட்சித்
தலைமையகத்தில் கூடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு வழங்கப்படவுள்ள பதவி மற்றும் அதிகாரங்கள் குறித்து இறுதித் தீர்மானம்
எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சியின் மத்திய குழுவிற்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை குமாரதுங்கவிற்கு வழங்க தற்போதைய
கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இதற்கு சந்திரிக்கா இதுவரை பதிலளிக்கவில்லை என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சந்திரிகா குமாரதுங்கவை மீண்டும் கட்சிக்கு அழைத்து வருவது எதிர்வரும் தேர்தலை கருத்திற்கொண்டு கட்சியின்
சீர்திருத்த வேலைத்திட்டத்திற்கான முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
Discussion about this post