அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் சிலவற்றின் விடயதானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் பிரதமர் தவிர்ந்த முழு அமைச்சரவையும் பதவி விலகியதையடுத்து கடந்த 18 ஆம் திகதி மீண்டும் புதிய அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையிலேயே புதிய அமைச்சுக்கள் மற்றும் அவற்றின் கீழ் உள்ளடங்கும் இராஜாங்க அமைச்சுக்களின் விடயதானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 9 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டு இந்த புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு, தொழிநுட்பம், புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள், நிதி, நீதி, வெளிநாட்டலுவல்கள், பொது நிர்வாக – உள்நாட்டலுவல்கள் – மாகாணசபைகள் – உள்ளுராட்சி, கல்வி, சுகாதாரம், தொழில், சுற்றாடல், வனஜீவராசிகள் – வன வளங்கள் பாதுகாப்பு, கமத்தொழில், நீர்ப்பாசனம், காணி, கடற்றொழில், பெருந்தோட்டக் கைத்தொழில், நீர் வழங்கல், மின்சக்தி, வலுசக்தி, துறைமுகங்கள் – கப்பற்துறை, நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, இளைஞர் விவகாரம் – விளையாட்டுத்துறை, சுற்றுலாத்துறை, வர்த்தகம், வர்த்தகம், கைத்தொழில், வெகுசன ஊடகம், பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி ஆகிய 31 அமைச்சுக்களின் விடயதானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Discussion about this post