இன்று சோபகிருது வருடம் ஆடி 20 (05.08.2023 ) சனிக் கிழமை. தேய்பிறை, சதுர்த்தி, பஞ்சமி திதி உள்ள நாளில், இன்று நாள் முழுவதும் சிம்ம ராசியை சேர்ந்த , மகம், பூரம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது.
மேஷ ராசிக்கு இன்று திடீர் பண வரவு மனதிற்கு திருப்தியையும், சந்தோஷத்தையும் தரக்கூடியதாக இருக்கும். பெண்களுக்கு இன்று முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். உங்களின் பிறந்த வீட்டின் மூலம் நன்மைகள் ஏற்படும்.
இன்று நீங்கள் குழந்தைகள் தொடர்பான ஏதாவது பற்றி கவலை ஏற்படலாம். உங்கள் மனைவியிடமிருந்து முழு ஆதரவையும் தோழமையையும் பெறுவீர்கள். கொடுத்த கடனை திரும்ப பெறுவீர்கள்.
ரிஷப ராசி பலன் :
ரிஷப ராசி நேயர்கள் இன்று சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவது நல்லது. 10ல் இருக்கும் சனி பகவான் உங்களுக்கு வேலை பளுவை அதிகரிப்பார். அதனால் சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.
குடும்பத்தில் தாயின் உடல்நிலை குறித்து கவலையடையலாம். குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை, இனிமையாகவும் ரொமாண்டிக்காகவும் இருக்கும். பொழுதுபோக்கு தருணங்களை செலவிடுவீர்கள்.
மிதுன ராசி பலன் :
மிதுன ராசி நேயர்கள் இன்று உங்களின் எண்ணங்கள் நிறைவேறும். புதிய வேலை முயற்சிகளும், வியாபார முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். பல நாட்களாக இருந்து வந்த கனவுகள் நிறைவேறும். இன்று சனிக்கிழமை ஸ்திர வாரத்தில் அன்னதானம் செய்ய நன்மைகள் உண்டாகும்.
மாணவர்கள் இன்று எந்த ஒரு போட்டியிலும் வெற்றி பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். முதலீடு செய்வது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விருந்து விழாக்களில் மகிழ்ச்சியாக இருக்கும்.
கடக ராசி பலன் :
கடக ராசி நேயர்கள் இன்று மனதிற்கு இதமான சில விஷயங்கள் நடைபெறும். 8ம் இடத்தில் இருக்கக்கூடிய சனிபகவானால் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற சில உறவுகள் மீண்டும் ஒன்று சேரலாம். அஷ்டம சனி பாதிப்புகளால் இதுவரை குடும்பத்தில் இருந்து வந்த இன்னல்கள் தீரும்.
சமூகப் பணிகளில் தீவிரமாக ஈடுபடலாம். உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். பிள்ளைகளின் பொறுப்புகளை நிறைவேற்றி வெற்றி பெறுவீர்கள்.
இன்று நரசிம்மருக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய நன்மை உண்டாகும்.
சிம்ம ராசி பலன் :
சிம்ம ராசி நேயர்கள் இன்று அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். பூரம் மற்றும் மகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக செயல்படவும். சிவாலயத்தில் நெய் தானம் செய்ய, இன்று சந்திராஷ்டம தோஷம் நிவர்த்தி ஆகும்.
எடுக்கும் துணிச்சலான முடிவுகளும் நடவடிக்கைகளும் நீண்ட காலத்திற்கு உங்களுக்கு பயனளிக்கும். குடும்பத்தில் எந்த ஒரு உறுப்பினரின் முன்னேற்றமும் வெற்றியும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.
கன்னி ராசி பலன் :
கன்னி ராசி நேயர்கள் இன்று கடன் கொடுப்பது, வாங்குவது தொடர்பாக சற்று கலகலப்பு ஏற்படலாம். ஆகவே இன்று நீங்கள் சற்று அமைதி காப்பது நல்லது. புதிய நண்பர்களை நம்ப வேண்டாம். தேவையில்லாத விஷயங்களில் மனஸ்தாபம், சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
வேலை தேடுபவர்கள் இன்று சாதகமான பலன்களைப் பெறலாம். குடும்பச் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
ஆஞ்சநேயர் ஆலயத்தில் தீபம் ஏற்றி வழிபடவும்.
துலாம் ராசி பலன் :
இன்று அனைத்து வகையிலும் சாதகமான பலன்களை அளிக்கப் போகிறது. கடந்த சில நாட்களாக வியாபாரத்தில் பரிவர்த்தனை பிரச்சனை நீங்கும்.
விருச்சிக ராசி பலன் :
விருச்சிக ராசி நேயர்கள் இன்று விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது நல்லது. விஷ்ணு ஆலயத்தில் உள்ள கருட பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய ராகு, கேதுவினால் ஏற்படக்கூடிய துன்பங்கள் விலகி நன்மை உண்டாகும்.
உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் கூட்டு தொழிலில் மேன்மை உண்டாகும். வேலைக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும்.
தனுசு ராசி பலன் :
தனுசு ராசி நேயர்கள் இன்று 4ம் இடத்தில் சந்திரனின் சஞ்சாரத்தால், உங்களுக்கு வீடு சம்பந்தமான விஷயங்களில் நல்லதொரு வெற்றியைத் தரும். பெண்களுக்கு சொத்து சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்.
உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு எதிரிகள் ஆச்சரியப்படுவார்கள். மனக்கசப்புடன் இருப்பதோடு, வேலையைச் செய்வதில் சிரமம் ஏற்படும். நண்பருடன் ஒரு பொழுதுபோக்கு தருணத்தை அனுபவிப்பீர்கள்.
இன்று பைரவரை வழிபட்டால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும்.
மகர ராசி பலன் :
மகர ராசி நேயர்கள் இன்று மகத்தான நாளாக அமையும். குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் சந்தோஷம் இருக்கும். பல நாட்களுக்கு பிறகு பெண்கள் உங்களின் பெற்றோர்களை சந்திப்பது அல்லது உடன் பிறந்தவர்களை சந்திப்பது மனதிற்கு இதமானதாக இருக்கும்.
பொருளாதார ரீதியாக நல்ல நாளாக இருக்கும். செய்யும் முயற்சிகள் மற்றும் வேலைகளை மக்கள் பாராட்டுவார்கள், வெற்றியால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். அலுவலக அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும். உங்கள் முயற்சியால் இந்த வேலையில் வெற்றி பெறலாம்.
மகர ராசி நேயர்கள் இன்று அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடவும்.
கும்ப ராசி பலன் :
கும்ப ராசி நேயர்கள் இன்று நாள் முழுவதும் சற்று மன குழப்பங்கள் இருக்கும். புதிய நண்பர்களால் சற்று தொல்லைகள் ஏற்படலாம். ஆகவே இன்று காலைவேளையில் விநாயகருக்கு பாலபிஷேகம் செய்ய தேவையில்லாத குழப்பங்கள் தீரும்.
செல்வாக்கும் புகழும் இன்று அதிகரிக்கும். எதிரியால் வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இன்று நிதி விஷயங்களில், தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தவும்.
மீனம் ராசி பலன் :
மீன ராசி நேயர்கள் இன்று நாள் முழுவதும் உங்களுக்கு உற்சாகமான நாளாக அமையும். இன்றைய நாளில் ஏற்படக்கூடிய சிறு சிறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். விட்டுப் பிரிந்து சென்ற சொந்தங்கள் மீண்டும் இணைய வாய்ப்புள்ளது. சனிக்கிழமையான இன்று அன்னதானம் செய்வதும், காக்கைக்கு அன்னம் இடுவதும் நற்பலனைத் தரும்.
கடன் வாங்கிய பணத்தைப் பெறுவது உங்களுக்கு கடினமாக இருக்கும். பயணத்தையும் தள்ளிப் போட வேண்டியிருக்கும். இன்று குடும்பத்தில் திருமண பேச்சு நன்மை உண்டாகும்.
Discussion about this post