இலங்கையில் இஞ்சியின் விலை 3,200 ரூபாவாக அதிகரித்துள்ளதால் நுகர்வோரின் தேவை குறைந்துள்ளது.
விவசாயிகள் விதை இஞ்சியை விற்பனை செய்வதன் மூலம் விரைவாக இலாபம் ஈட்டுவதாகவும், ஆனால் மருத்துவ குணம் கொண்ட இஞ்சி அல்லது உள்ளூர் இஞ்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் அண்மையில் நாட்டில் பெய்த பலத்த மழையினால் பயிர்கள் நாசமடைந்து இஞ்சி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Discussion about this post