போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாடடில் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உபபொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையில் யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு நடத்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 3 ஆயிரம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும், விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post