Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

30 ஆண்டுகளாக கழிவறையில் உணவு தயாரித்த உணவகம்

April 21, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
30 ஆண்டுகளாக கழிவறையில் உணவு தயாரித்த உணவகம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

சவுதி அரேபியாவில் ஜெட்டா நகரில் உள்ள உணவகம் ஒன்று கடந்த 30 ஆண்டுகளாக கழிவறையில் இயங்கி வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நகராட்சி அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அந்த உணவகத்திற்கு சென்று சோதனையிட்டதில், அவர்களுக்கு பலத்த அதிர்ச்சி காத்திருந்தது.

30 ஆண்டுகள் பாரம்பரியமிக்க அந்த உணவகத்தில் சமோசா உள்ளிட்ட பிற பலகாரங்கள் கழிவறையில் வைத்து தயாரிக்கப்பட்டு வந்துள்ளன. கழிவறையிலேயே மதிய உணவு உள்ளிட்ட பிற உணவுகளும் தயாரிக்கப்பட்டு உள்ளன.

இதுதவிர காலாவதியான இறைச்சி மற்றும் பாலாடை கட்டி ஆகியவையும் அந்த உணவகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அவற்றில் சில 2 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகி இருந்தன. பூச்சிகளும், எலிகளும் உணவகத்தில் ஓடி, ஆடியபடி இருந்தன. 30 ஆண்டு பழமையான உணவகத்தின் பணியாளர்களுக்கு சுகாதார அட்டைகள் எதுவும் இல்லை.

சட்ட விதிகளை மீறியுள்ளது தெளிவாக அதிகாரிகளுக்கு தெரிந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த உணவகம் பூட்டப்பட்டு உள்ளது. சுகாதாரமற்ற முறையில் உள்ள உணவகம் சவுதி அரேபியாவில் மூடப்படுவது என்பது இது முதல் முறையல்ல என கூறப்படுகின்றது.

கடந்த ஜனவரியில் ஜெட்டா நகரில் ஷாவார்மா உணவு விடுதியில் எலி ஒன்று அலைந்து கொண்டு அங்கிருந்த இறைச்சியை சாப்பிட்டு கொண்டும் இருந்தது. பிரபல உணவு விடுதியில் எடுக்கப்பட்ட அதிர்ச்சி தரும் அந்த வீடியோவை பார்த்த பலரும் சமூக வலைதளத்தில் கொந்தளித்தனர்.

உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை வலியுறுத்தினர். இதனையடுத்து அந்த உணவகத்திற்கு சீல் வைத்து அதிகாரிகள் மூடினர்.

Tags: #Cooking#CookingToilet#FoodShortages#Restaurant#SaudiArabia#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

பூநகரி – மாங்குளம் – பரந்தனில் புத்தர் சிலைகள்..!

Next Post

நல்லூரில் இடம்பெற்ற தாக்குதல்

Next Post
நல்லூரில் இடம்பெற்ற தாக்குதல்

நல்லூரில் இடம்பெற்ற தாக்குதல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.