மேஷம்

நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அனுகூலமும் ஆதாயமும் உண்டாக வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். கல்வியில் மேல் நிலையை அடைவீர்கள் பொருளாதாரத்தில் வெற்றி கிடைக்கும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டு கல்வி பயின்று கொண்டிருப்பவர்கள் உயர்கல்வி பயின்று கொண்டிருப்பவர்கள் மற்றும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள்.
ரிஷபம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். செய்யும் தொழிலில் மேன்மை கிடைக்கும். புது தொழில் முயற்சிகள் வெற்றி தருவதாக உணவுத்துறை சுற்றுலாத்துறை பிரின்டிங் விஷுவல் மீடியா கலைத்துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு வெற்றி தரும் நாளாக இன்றைய நாள் அமையும்.
வெளியூர் அல்லது வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்து கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். வெற்றி கிடைக்கும் நாள். ஆகும் நந்தீஸ்வரர் வழிபாடு நலம் பயக்கும். எதிர்பார்த்த தனவரவு உண்டு.
மிதுனம்

உங்கள் படிப்பு நன்முறையில் மேம்படும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் அன்னியோன்னியம் சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு தாங்கள் பிறந்த வீடுகளில் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள்.
சிலர் வீடு கட்டுவது வாங்குவது போன்ற எதிர்கால சேமிப்பை நோக்கி சென்று கொண்டிருப்பார்கள் இவைகளின் வெற்றி உண்டாகும். படிப்பை முடித்து வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். அரசுத்துறை வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள்.
கடகம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக செல்லும். உடல்நலனில் சற்று கவனம் தேவை. குறிப்பாக சளி சம்பந்தப்பட்ட தொல்லைகள் ஏற்படலாம் சற்று அலைச்சல்கள் இருந்தாலும் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.
பெண்களுக்கு இன்றைய நாள் நன்றாக இருக்கும். தனவரவை அதிகப்படுத்தும் செய்யும் தொழிலில் வெற்றி காண்பீர்கள். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
சிம்மம்

இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். வழக்கு போன்றவற்றில் வெற்றி உண்டாகும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும்.
நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்று விடுவீர்கள். உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான வாய்ப்பு ஒரு சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு இடமாற்றத்திற்கான வாய்ப்புகள் தாங்கள் வசிக்கும் நாடுகளுக்கு உள்ளேயே மாற்றங்களை சந்திக்கலாம். இம் மாற்றங்களால் மேன்மை உண்டாகும்.
கன்னி

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். பிரயாணங்கள் தொடர்பான திட்டமிடுதல் இருக்கும். பெண்களுக்கு இனிமையான நாள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்களின் கல்வி மேம்படும் உடல் நலம் சீராக இருந்துவரும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வழக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். வெங்கடாஜலபதி வழிபாடு நல்ல முன்னேற்றத்தை தருவதாக இருக்கும்.
துலாம்

இன்று கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் விமர்சன சிந்தனை மற்றும் அறிவார்ந்த சக்தியுடன் செயல்படுவதன் மூலம், சரியான முடிவுகளை எடுப்பதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். புதிய திட்டத்தில் செயல்பட இன்று சரியான நாள்.
நண்பர் அல்லது உறவினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கஷ்டப்படுவீர்கள். ஒருவருக்குச் செய்யப்படும் பரிந்துரை உங்களுக்கு எதிர்மறையான முடிவுகளைத் தரும். கடன் தொடர்பான எந்த விதமான பரிவர்த்தனைகளிலும் ஈடுபடாதீர்கள். வேலை மும்முரமாகத் தொடரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
விருச்சிகம்

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். வெளிநாடு வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகளும் தகவல்களும் வந்து சேரும்.
கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். சொந்தத் தொழில் சிறப்பான மென்மை பெறும் சற்று பற்றாக்குறை இருந்து வந்தாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள்.
தனுசு

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும் .உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். வாக்கு நாணயத்தைக் காப்பாற்றி கொள்வீர்கள். உங்கள் பேச்சுக்கு சமுதாயத்தில் மதிப்பும் அதிகம்.
வாகன வகை உணவு தொழில் விஷுவல் மீடியா மற்றும் பிரிண்டிங் மீடியா துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். கணவன் மனைவி உறவு சீராக இருந்துவரும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். புது தொழில் முயற்சிகள் வெற்றியடையும்.
மகரம்

இன்று அரசியல் விஷயங்களில் ஆதிக்கம் அதிகரிக்கும். எந்தவொரு சிக்கலான வேலையும் நண்பர்களின் உதவியுடன் தீர்க்கப்படும். ஆன்மிக வழிபாட்டு இடத்திற்குச் செல்லும் திட்டம் இருக்கலாம்.
வீட்டின் பெரியோர்களின் பாசமும் ஆசியும் கிடைக்கும். ஒரு நண்பரிடம் வெறுப்பு உணர்வு உங்கள் மனநிலையை கெடுக்கும். பணம் விஷயத்தில் கடினமான நாளாக இருக்கும். மக்கள் தொடர்பு வலுவாக இருக்கும் மற்றும் நன்மை பயக்கும்.
கும்பம்

நண்பர்களுக்கு வீன் அலைச்சல்களையும் புதிய ஒப்பந்தங்களையும் புது முயற்சிகளையும் தவிர்த்துக் கொள்வது தேவையற்ற மன அழுத்தத்தில் இருந்து உங்களை வெளிக்கொண்டுவரும் பெண்களுக்கு குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும்.
ஒரு சில பிரச்சனைகள் வந்தாலும் பெரிதாக மனதை பாதித்தது என்று இல்லை உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும் படிப்பில் கூடுதல் கவனம் தேவை.
மீனம்

மனைவி உறவு மேம்படும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். வயதானவர்களுக்கு உடல் நலம் சீராக இருந்துவரும். உங்கள் பேச்சிற்கு மரியாதையும் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மகிழ்ச்சி உண்டு. வாகன வகையில் ஆதாயம் கிடைக்கும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு போன்ற நல்ல நிகழ்வுகளுக்கு அடித்தளம் அமைக்கும். நல்ல நாளாக இன்றைய நாள் அமையும்.
குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும் பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை மேம்படும். கணவன் மனைவி உறவு அன்பு உடையதாக மாறும் முருகன் வழிபாடு மேலும் வெற்றியை குறிக்கும்.
Discussion about this post