யாழ்ப்பாணம் – நாகர்கோவில் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையில் 70 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று(05) முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, டிங்கி படகிலிருந்து 31 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த நிலையில் குறித்த கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி 28 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 2 சந்தேகநபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
28 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
Discussion about this post