24 வருடங்களிற்கு பின், ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வடகொரியாவிற்கு இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ளார். வடகொரியா செல்லவுள்ள புட்டின், அந்நாட்டு அதிபர் கிம் ஜொங் அன்னை சந்திப்பார் என கூறப்படுகின்றது.
அதேவேளை உக்ரைனிற்கு எதிரான ரஸ்யாவின் யுத்தத்திற்கு உறுதியான ஆதரரவ வழங்குவதற்காக வடகொரியாவிற்கு புட்டின் நன்றி தெரிவித்துள்ளார். வடகொரிய அரச ஊடகத்தில் வெளியாகியுள்ள கடிதத்தில் புட்டின் இதனை தெரிவித்துள்ளார்.
அதோடு மேற்குநாடுகளால் கட்டுப்படுத்தப்படாத பொருளாதார பாதுகாப்பு முறையை வடகொரியாவுடன் இணைந்து உருவாக்குவேன் என புட்டின் உறுதி வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் இராணுவ அச்சுறுத்தல்கள் போன்றவற்றிற்கு மத்தியில் தனது நலனை பாதுகாப்பதற்காக வடகொரியா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு புட்டின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் நீதிக்கான பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் பன்முனைப்படுத்தப்பட்ட உலக ஒழுங்கைஸ்தாபிப்பதை தடுக்கும் மேற்கத்தைய இலட்சியங்களை ரஸ்யாவும் புட்டின் உறுதியாக எதிர்க்கும் என ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Discussion about this post