அமெரிக்காவின் வரி விதிப்பை ஏற்க உலக வர்த்தக அமைப்பு மறுத்துவிட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி
உள்ளது.
சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் எஃகு, அலுமினியப் பொருட்கள் மீது அமெரிக்கா மேலதிக வரி
விதித்த நிலையில், இந்த மேலதிக வரியை உலக வர்த்தக அமைப்பு ஏற்க மறுத்துள்ளது.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு பொருளுக்கு 25 சதவீத வரியும் அலுமினிய பொருள்களுக்கு 10 சதவீத
வரியும் 2018ஆம் ஆண்டு அமெரிக்க அரசு விதித்தது.
இந்த நிலையில் தற்போது இந்த வரியை அதிகரித்திருக்கும் நிலையில் உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறும்
வகையில் இது உள்ளது என உலக வர்த்தக அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை சீனா
வரவேற்றுள்ளது.
Discussion about this post