அரசமைப்பின் 21 ஆவது திருத்தத்தின் பல விதிகள் அரசமைப்புக்கு முரணானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகள் இன்று காலை ஆரம்பமானதையடுத்து, அரசமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சமர்ப்பித்தார்.
21ஆவது திருத்தத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த சரத்துகளை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என உச்ச நீதிமன்றம் தமக்கு அறிவித்துள்ளது என்று சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Discussion about this post