Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

2024 ஜனாதிபதித் தேர்தல் வாக்காளர்களுக்கான அறிவுறுத்தல்

September 13, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
2024 ஜனாதிபதித் தேர்தல் வாக்காளர்களுக்கான அறிவுறுத்தல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்லும் போது செல்லுபடியாகும் அடையாள அட்டைகளை எடுத்துச் செல்வது அவசியமானது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.இதன்படி, தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் வெளிநாட்டு கடவுச்சீட்டு, ஆட்கள் பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை எடுத்துச் செல்ல முடியும் என ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

செல்லுபடியான அடையாள அட்டைகள்

மேலும், அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட மதகுரு அடையாள அட்டை, ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை தகவல் உறுதிப்படுத்தல் கடிதம் என்பனவும் வாக்களிக்க செல்லுபடியாகும்  என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை ஆகியவையும் வாக்களிக்க செல்லுபடியாகும்.

உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு

தெளிவில்லாத அடையாள அட்டைகள், அமைச்சுகள், திணைக்களங்கள், அரச நிறுவனங்கள், வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் மற்றும் தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கான விண்ணப்பத்தின் போது வழங்கப்படும் பற்றுச்சீட்டு உள்ளிட்ட எந்தவொரு ஆவணமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்லும்போது உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை எடுத்துச் செல்வது மிகவும் அவசியம் எனவும் இது வாக்களிப்பு நிலைய அதிகாரிகளுக்கு வசதியாக இருக்கும் என்றும் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

ஏவுகணைகளுடன் ரஷ்யா வந்த சரக்குக் கப்பல்: வெளியான ஆதாரங்கள்

Next Post

2025 இல் பிரித்தானியா செல்ல காத்திருப்போருக்கு வெளியான தகவல்

Next Post
2025 இல் பிரித்தானியா செல்ல காத்திருப்போருக்கு வெளியான தகவல்

2025 இல் பிரித்தானியா செல்ல காத்திருப்போருக்கு வெளியான தகவல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.