கோவையில் இருந்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று வந்தவர் தான் அனு மோகன்.
1980களில் இயக்குனராக அறிமுகமான இவர் இது ஒரு தொடர் கதை, நினைவு சின்னம், மேட்டுப்பட்டி மிராசு, அண்ணன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
அதோடு அர்ச்சனை பூக்கள், விஐபி, மூவேந்தர், நட்புக்காக, மன்னவரு சின்னவரு, படையப்பா, சுயம்வரம், மின்சார கண்ணா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
படம் நடிப்பு, இயக்கம் ஆகியவற்றை தாண்டி சித்தர் ஏட்டுக்குறிப்புகளை கொண்டு சில விஷயங்களை கூறி வருகிறார்.
அவர், 31.12.204க்குள் ஒரு பெரிய அழிவு வரும், அதில் இலங்கை எனும் தீவு சுனாமியால் காணாமல் போகும், இது சித்தர் ஏட்டுக் குறிப்புகளில் இருக்கிறது.
மேலும், சுனாமி காரணமாக, சென்னை தேனாம்பேட்டை வரை கடலாக மாறிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் இவர் இந்தியா 2023 உலகப் கோப்பையை கைப்பற்றும் என்றார், ஆனால் அது நடக்கவில்லை, இதை வைத்து ரசிகர்கள் பலரும் அவரை கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Discussion about this post