2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு உத்தியோகபூர்வமாக வௌியிடப்பட்டுள்ளது.
வாக்காளர் இடாப்பு உறுதிப்படுத்தப்பட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வௌியிடப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேவைக்கேற்ப வாக்காளர் இடாப்பை அச்சிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, இவ்வார இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தேர்தல் திகதி குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு இந்த வார இறுதிக்குள் வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார்.
இதேவேளை, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட சந்திப்பு எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை அறிவிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் கிடைத்து இன்றுடன் 5 நாட்கள் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post